புடலங்காய் ஆப்பிள் சாலட் / SNAKE GOURD APPLE SALAD

Posted in சலட் வகைகள்

 தேவையான பொருட்கள்

புடலங்காய்          -       ஒரு துண்டு (200 கிராம்)

ஆப்பிள்              -       ஒன்று

காரட்                -       2

வெங்காயம்         -       2

   தக்காளி             -       2

பச்சை மிளகாய்     -       2

எலுமிச்சை          -       புளிப்பிற்கேற்ப

 மிளகு தூள்           -       காரத்திற்கேற்ப

உப்பு                 -       தேவையான அளவு

செய்முறை

கேரட்டைத் துருவிக் கொள்ளவும். புடலங்காயை தோல் சீவி மெல்லிய அரை வட்ட வில்லைகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீளமாகவும், பச்சை மிளகாயை விதை நீக்கி நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

ஆப்பிளை நீளமான துண்டுகளாக நறுக்கி கருத்துவிடாமலிருக்க சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு அகலமான பவுலில் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு உப்பு, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

டேஸ்டி புடலங்காய் ஆப்பிள் சாலட் ரெடி.

மிகவும் சுவையான சாலட் இது. பார்ட்டிகளுக்கு ஸ்டாட்டராக வைப்பதற்கு ஏற்றது. புடலங்காயை வேகவைத்து சாப்பிடுவதைவிட இப்படி சாப்பிடுவதால் அதன் சத்து முழுமையாக உடலில் சேரும். க்ரீன் ஆப்பிள் சேர்த்து செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

Snake Gourd Health Benefits And Minerals

Apple Health Benefits And Minerals

Carrot Health Benefits And Minerals

.