ரசப்பொடி

Posted in மாவு வகைகள்

தேவையான பொருட்கள்

மல்லி                -      ¾ கப்

காய்ந்த மிளகாய்     -      20

துவரம் பருப்பு       -      ¼ கப்

கடலை பருப்பு       -      ¼ கப்

நல்ல மிளகு         -      3 தேக்கரண்டி

சீரகம்               -      3 தேக்கரண்டி

பெருங்காயம்        -      அரை  தேக்கரண்டி         

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

ஃபனை சூடாக்கி அதில் காய்ந்த மிளகாய் கடலை பருப்பு துவரம் பருப்பு பெருங்காயம் சோ்த்து வறுக்கவும்

அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

பின்பு மல்லி மற்றும் நல்ல மிளகு ஆகியவற்றை வறுக்கவும்

பென்நிறமாக வறுத்த பின் ஜீரகம் சோ்த்தது வறுக்கவும்

அதனையும் அதே பாத்திரத்தில் வைத்து ஆற வைக்கவும்

பின்பு மிக்சி ஜாரை எடுத்து அதில் அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சோ்க்கவும்

அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

இப்போது ரசப்பொடி ரெடி. அதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன் படுத்தலாம்

.