சுண்டைக்காய் வற்றல் பொடி / TURKEY BERRY VATTAL PODI / DRIED SOLANUM TORVUM POWDER

Posted in மாவு வகைகள்

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் வற்றல்       –        1 கப்

வத்தல் மிளகாய்            –        2 - 3

ஜீரகம்                      –        2 தேக்கரண்டி

பூண்டு                      –        3 பற்கள்

எண்ணெய்                  –        1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். உப்பு சேர்க்க தேவையில்லை. சுண்டைக்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்ந்திருக்கும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சுண்டைக்காய் சேர்க்கவும்.

பொன்னிறமாக பொரிக்கவும்

ஜீரகம் மற்றும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்

பொன்னிறமாக பொரிக்கவும்

பின்பு அவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

பூண்டு சேர்க்கவும்

கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

சுண்டைக்காய் வற்றல் பொடி ரெடி!!!

.