மீன் மசாலா தூள் / FISH MASALA POWDER

Posted in மாவு வகைகள்

தேவையான பொருட்கள்

முழு மல்லி            –        ½ கிலோ

ஜீரகம்                     –        50 கிராம்

 

நல்ல மிளகு           –        25 கிராம்

மிளகாய்வற்றல்       –        ¼ கிலோ

கறிவேப்பிலை        –        தேவைக்கு

எண்ணெய்               –        1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

மல்லியை குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும்

அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

அதே பானில் நல்ல மிளகு மற்றும் ஜீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே பாத்திரத்தில் வைக்கவும்

பின்பு கறிவேப்பிலையை அதே பானில் போட்டு வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே பாத்திரத்தில் வைக்கவும்

பானில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதில் வத்தல் மிளகாயை போட்டு வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே பாத்திரத்தில் வைத்து ஆற வைக்கவும்

பின்பு மிக்சி ஜாரை எடுத்து அதில் அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சோ்க்கவும்

மஞ்சள் தூள் சேர்க்கவும்

அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

அதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன் படுத்தலாம்

.