சாம்பார் பொடி செய்வது எப்படி? / HOW TO MAKE SAMBAR POWDER ?

Posted in மாவு வகைகள்

தேவையானப்பொருட்கள்:

மிளகாய் வற்றல்             -       40 nos

 முழு மல்லி  )                -       1 கப்

   ஜீரகம்                          -      ½ கப்

வெந்தயம்                      -     1/4கப்

துவரம்பருப்பு                   -       1/4கப்

உளுத்தம்பருப்பு                -       1/4கப்

காயத் தூள்                    -       1 டீஸ்பூன்)

மஞ்சள் தூள்                 -        1 டீஸ்பூன்

கறிவேப்பிலை               -       4 ஈர்க்கு (விருப்பமானால்)

எண்ணை                       -       2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

தேவையானப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

ஓரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, மேற்கண்ட பொருட்கள் (மஞ்சள்தூள் தவிர) ஒவ்வொன்றையும், தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் உபயோகித்தால், அதையும் வறுத்துக் கொள்ளவும். தூள் பெருங்காயம் என்றால் வறுக்கத் தேவையில்லை.

கடைசியில், வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக, அதே வாணலியில் கொட்டி, அத்துடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

 

சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: மேற்கண்ட விதத்தில் செய்யும் பொடி 10 முதல் 15 நாட்களுக்கு வாசனை போகாமல் நன்றாக இருக்கும். சாம்பார் மற்றும் பொரிச்ச குழம்பு, கூட்டு செய்வதற்கு உபயோகிக்கலாம்.

 

.