செட்டிநாட்டு மீன் குழம்பு மசாலாப் பொடி / CHETTINAD FISH CURRY MASALA

Posted in மாவு வகைகள்

தேவையான பொருட்கள்:

 

மிளகாய் வற்றல்                -       8

  முழு மல்லி                       -       3 தேக்கரண்டி

ஜீரகம்                                 -       1 தேக்கரண்டி

மிளகு                                 -       1தேக்கரண்டி

விரலி மஞ்சள்                     -       ¼ தேக்கரண்டி

 வெந்தயம்                           -       1 தேக்கரண்டி

 காயத் தூள்                        -       ¼தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

 

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

 

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து

அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

 

குறிப்பு:.இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.

 

.